குங்குமப்பூ ரைஸ்

Description:

பாஸ்மதி அரிசி – 1 கப்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 1½ டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பால் – 100 மி.லி.,
குங்குமப்பூ – 1 கிராம்,
உலர்ந்த திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்,
உலர்ந்த அத்திப்பழம் – 5,
முந்திரி – 7,
பாதாம் – 5.

நான்ஸ்டிக் தவாவில் நெய்யை ஊற்றி சூடானதும் உலர்ந்த திராட்சை, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், அத்திப்பழத்தை வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அரிசியை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். 1 டீஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடானதும் அரிசியை போட்டு 2 நிமிடங்கள் உடையாமல் வறுத்து, கரைத்த குங்குமப்பூ, பால், 3/4 கப் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவைக்கவும். பாதி வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து வேகவிடவும். ஒன்றோடு ஒன்று கலந்து அரிசி ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். வறுத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ் கலவையை கொட்டி கலந்து பரிமாறவும்.

குறிப்பு: குங்குமப்பூ இல்லையென்றால் ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்க்கலாம். வாசனைக்கு ரோஸ் வாட்டர் சேர்க்கலாம்.

Post a Comment