பெங்காலி தவா பிரான்

Description:

இறால் – 1/2 கிலோ,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 4,
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு, பச்சைமிளகாய் – 5,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – சிறிது,
முருகுல் (kokam) – 4.


கடாயில் எண்ணெயை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு இறாலை சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் முருகுலை சேர்த்து 7 நிமிடம் நன்கு வதக்கவும். இறால் நன்கு வெந்து திக்காக வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Post a Comment