மஸ்டர்ட் ஃபிஷ் டிக்கா

Description:

சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் – 1/2 கிலோ,
கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் கடுகு – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 4,
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்,
ஹங்க் கர்ட் – 1/3 கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
கடுகு எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

கடுகு, மஞ்சள் கடுகு, பச்சைமிளகாய், கசகசா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த மசாலா, தயிர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து, இந்த மசாலாவை மீன் மேல் முழுக்க தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக ஸ்க்யூவர் குச்சியில் குத்தி கிரில் செய்யவும் அல்லது தவாவில் கடுகு எண்ணெய் சேர்த்து மீன் முழுவதும் வேகும்படி பொரித்தெடுத்து பரிமாறவும்.

Post a Comment