கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

Description:

கணவாய் மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2ஸ்பூன்
மிளகுத்தூள் – கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மல்லிதுர்ள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கணவாய் மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள்.

கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கி வரும்போது அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக் கிளரி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாய் மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

கணவாய் மீன் வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்

Post a Comment