செட்டிநாடு மிளகு நண்டுக் குழம்பு / chettinad milagu nandu kulambu

Description:

தேவையான பொருட்கள்:
நண்டு – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 4
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
புளி – சிறிதளவு
இஞ்சி – சிறிது
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

சீரகம் – 1ஸ்பூன்

மிளகு – 3 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
நல்லெண்ணெய் – குழிகரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு

செய்முறை:

நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில்நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.

Post a Comment