எழுத்தாளர் ஞாநி மறைவு: ஸ்டாலின், ரஜினி இரங்கல்

Description:

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (63) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவரது இயற்பெயர் வே. சங்கரன். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எழுத்தாளர் ஞாநியின் மறைவை அறிந்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சுயசார்புடன் இயங்கி வந்த ஞாநியின் மறைவு தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஞாநி சங்கரன் மறைவு வருத்தமளிக்கிறது. எழுத்தாளர் ஞாநி எனது நண்பர்; நான் அவரது ரசிகன். தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாநி என தெரிவித்துள்ளார்

Post a Comment