பளபளப்பான சருமத்திற்கு மயோனைஸ் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Description:

இன்று நம் பதிவில், மயோனிஸ் பயன்படுத்தி, சரும பாதிப்புகளை போக்கி, களங்கமற்ற சருமத்தை பெரும் வழிகளை பார்ப்போம். மேக்கப் உதவி இல்லாமல் அழகான சருமத்தை பெறுவது என்பது வரம் தானே? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மயோனைஸ் மற்றும் ஓட்ஸ் :

மயோனைஸ் மற்றும் ஓட்ஸ் :
1 ஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் 1 ஸ்பூன் மயோனைஸ் , இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவவும்.

15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் பிரகாசிக்கும்.

மயோனைஸ் மற்றும் ஆரஞ்சு தோல் மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் ஆரஞ்சு தோல் மாஸ்க் :
1/2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன் 2 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும்.

இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.

15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

முகத்தில் கருந்திட்டுக்கள் இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.

மயோனைஸ் மற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க் :

வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க! வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!
காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்
பள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா? இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்! பள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா? இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்!
Featured Posts
மயோனைஸ் மற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க் :
1/2 ஸ்பூன் பாதம் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் தடவவும்.

10 நிமிடம் கழித்து மென்மையான க்ளென்சர் மூலம் வெந்நீரால் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.

வறண்ட சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது.

மயோனைஸ் மற்றும் அரிசி மாவு மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் அரிசி மாவு மாஸ்க் :
1 ஸ்பூன் அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.

இதனுடன் 1 ஸ்பூன் மயோனைஸ் சேர்க்கவும்.

இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.

10 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

சூரிய ஒளியால் சருமத்திற்கு உண்டான கருமை மற்றும் பொலிவிழப்பை இந்த முறை சரி செய்கிறது.

மயோனைஸ் மற்றும் கற்றாழை மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் கற்றாழை மாஸ்க் :
1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும்.

இந்த மாஸ்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விடவும்.

பிறகு வெந்நீரால் முகத்தை கழுவவும்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால் , முகத்திற்கு நீர்சத்து அதிகரிக்கிறது.

மயோனைஸ் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க் :
1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.

இந்த கலவையை தடவிய பிறகு, மென்மையாக மசாஜ் செய்யவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.

மயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க் :
மயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும்.

இந்த மாஸ்கை முகத்தில் தடவவும்.

மென்மையாக மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் வயது முதிர்வு தடுக்கப்படும்.

மயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க் :

மயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க் :
2 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் தடவவும்.

15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பிறகு மென்மையான க்ளென்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

சீரான சரும நிறத்தை பெற இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

சரும பாதிப்பில் இருந்து விலகி, அழகான சருமம் பெற மேலே கூறியவற்றை முயற்சித்து பார்க்கவும்.

Post a Comment