பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா

Description:

ஆப்பிள் சீடர் வினிகர் * 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும். * பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். * இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை

வேளையில் செய்ய வேண்டும். * ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை * ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும். * இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

வாழைப்பழ தோல் * வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். * இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும். தேங்காய் எண்ணெய் * தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும். * பின் அந்த எண்ணெயை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். * இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும். ஆரஞ்சு ஆயில் * காலையில் பற்களைத் துலக்கும் போது, பேஸ்ட்டுடன் ஆரஞ்சு ஆயிலை 2-3 துளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். * பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும். * இப்படி காலை மற்றும் இரவு நேரத்தில் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும். நல்லெண்ணெய் * 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயினுள் விட்டு 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இச்செயலை செய்ய வேண்டும். * பின்பு 20 நிமிடம் கழித்து எண்ணெயை வாயில் இருந்து வெளியேற்றி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். * பின் எப்போதும் போன்று பிரஷ் செய்யுங்கள். இச்செயலால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். சாம்பல் * சாம்பல் கிடைத்தால், அதை கை விரலால் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும். * பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய, சாம்பல் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் மஞ்சள் கறைகளை உறிஞ்சி வெளியேற்றி, பற்களை வெண்மையாக காட்டும். பெராக்ஸைடு * 1 கப் 2-3.5% ஹைட்ரஜென் பெராக்ஸைடை, 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த நீரை வாயில் விட்டு 30-40 நொடிகள் கொப்பளித்து துப்ப வேண்டும். * பின்பு சாதாரண நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பற்கள் வெண்மையாகவும் வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும். எலுமிச்சை மற்றும் உப்பு * 1 டீஸ்பூன் உப்பில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும். * இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் அசிங்கமாக இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். முக்கியமாக இந்த முறையை அடிக்கடி செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும். மஞ்சள் * சிறிது மஞ்சள் தூளை டூத் பிரஷில் தூவி, பற்களைத் தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து மீண்டும் துலக்கி நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இப்படி ஒருமுறை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகன்று இருப்பதை நன்கு காணலாம். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஈறுகளில் உள்ள தொற்றுக்களை நீக்கி, வாய் துர்நாற்றத்தையும், ஈறு பிரச்சனைகளையும் தடுக்கும். எப்சம் உப்பு * 1 பகுதி எப்சம் உப்பு 1 பகுதி நீரில் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அந்த நீரில் நனைத்த பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். * எஞ்சிய நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதன்பின் சாதாரண நீரால் வாயைக் கொப்பளியுங்கள். *

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். கொய்யா இலைகள் * 1-2 கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். * பின் அந்த பேஸ்ட் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும். * அதைத் தொடர்ந்து நீரால் வாயைக் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள். * இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், பற்கள் வெண்மையாக இருக்கும். வேப்பிலை * 4-5 வேப்பிலையை 1 1/2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். * பின் அதனை வடிகட்டி குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரால் பற்களைத் துலக்கும்

முன் வாயைக் கொப்பளியுங்கள். * இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வாய் துர்நாற்றமும் நீங்கும். ஆரஞ்சு தோல் * ஆரஞ்சு தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும். * பின் பிரஷ் கொண்டு எப்போதும் போன்று டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள். * இப்படி ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். ஸ்ட்ராபெர்ரி * 1 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையைக் கொண்டு பற்களைத் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். * பின்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதைத் தொடர்ந்து எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும். * இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

Post a Comment