தூங்குவது போல நடித்தனர்! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை பற்றி சனுஷா கண்ணீர்

Description:

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சனுஷா. இவர் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளானது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் விவரித்துள்ள சனுஷா, ‘நான் கத்தி கதறிய போதும் ரயிலில் இருந்த மற்றவர்கள் தூங்குவது போல நடித்துகொண்டிருந்தனர்” என கூறியுள்ளார்.

படப்பிடிப்புக்காக கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இவர் ரயிலில் பயணம் செய்துள்ளார். நள்ளிரவில் அவர் தூங்கிவிட்ட பிறகு எதிர் சீட்டில் படுத்திருந்த 40 வயதுடைய ஆண்டோ போஸ் சனுஷாவின் உதட்டை தடவியுள்ளார்.

அதனால் அதிர்ச்சியான சனுஷா உடனே அவன் கையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால் “மற்றவர்கள் தூங்குவது போல படித்துக்கொண்டிருந்தனர். பிறகு இருவர் மட்டும் எனக்கு உதவ முன்வந்து டிடிஆரிடம் புகார் அளித்தனர்” என சனுஷா தெரிவித்துள்ளார்.

“எப்போவும் நான் தைரியமா இருப்பேன். அதனாலதான் எங்க அம்மா, அப்பா என்னைத் தனியா அனுப்பிவெச்சாங்க. இந்தச் சம்பவத்தால் நான் பயந்து ஒதுங்கவில்லை. ஆனா, இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்துச்சு. பெண்களிடம் கண்ணியமா நடந்துகொள்வது ஆண்களின் கடமை. அதை அவங்க மீறக்கூடாது. என்னைமாதிரி எந்தப் பெண்ணிடமும் இனி அந்த நபர் தப்பா நடந்துக்கக்கூடாது, அதுக்காகத்தான் நான் தைரியமா போலீஸிடம் புகார் கொடுத்தேன். அந்த நபருக்கு தண்டனையும் வாங்கிக்கொடுப்பேன். இந்த வழக்கை நான் அப்படியே விட்டுடாம, கடைசிவரைக்கும் எதிர்கொள்ளப்போறேன்” என சனுஷா மேலும் கூறினார்.

Post a Comment