ஓவியா உருக்கமான கருத்து:வெற்றி பெறுவதால் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை

Description:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியாவிற்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் அவரது ரசிகர்கள் இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் பற்றி இன்று ட்விட்டரில் பேசிய ஓவியா தன் ரசிகர்களால் தான் இந்த நிலைமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

“நான் வெற்றி பெறுவதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை, அவர்கள் என்னை நேசிப்பதால் தான் நான் வெற்றி பெறுகிறேன்” என அவர் ட்விட்டியுள்ளார்.

Post a Comment