பிரபல நடிகை தெய்வமகள் வாணி போஜனுக்கு வந்த சோதனை!

Description:

தமிழ் சீரியல்களில் நடிப்பவர்கள் நல்ல கேரக்டர்களில் நடித்தால் பலரின் மனதில் நிற்பர் என்றாகிவிட்டது. வில்லன், வில்லியாக நடித்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பது சில பிரபலங்களின் கருத்து.

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் இடம் பிடித்தவர் வாணி போஜன். சத்யாவாக நடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை பெற்றுள்ளார்.

பி.ஏ. பட்டம் பெற்றவர் முதலில் வேலைக்கு சேர்ந்தது கிங் ஃபிஷர் விமானத்தில் விமான பணிபெண்ணாக தானாம். நாளும் பயணம், புது புது மக்கள் என மகிழ்ச்சியில் வலம் வந்து கொண்டிருந்தாராம்.

திடீரென இந்த பிடித்தமான வேலை இல்லை என ஆனதும் அவர் மன கவலையில் வீட்டிலேயே இருந்துவிட்டாராம். பின் விளம்பரங்கள், சீரியல்கள் என நடிக்க தொடங்கினாராம்.

அதிலும் தெய்வ மகள் சீரியல் நடிக்கும் போது தான் முழுமையாக தமிழ் கற்றுக்கொண்டாராம்.

Post a Comment