ராக்ஸ்டார் ரமணி அம்மாவை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி- கொந்தளிக்கும் ரசிகர்கள்

Description:

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் போட்டி இருக்கும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது தொலைக்காட்சிகளுக்குள் நடக்கும் போட்டியை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது.

அதாவது பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்தது. அந்நிகழ்ச்சியை கலாய்த்து மற்றொரு பிரபல தொலைக்காட்சி செய்த கலாட்டா நமக்கு எல்லாம் நன்றாகவே தெரியும்.

தற்போது மீண்டும் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆசை பாடகியாக மாறியவர் ரமணி அம்மா. இவரை கலாய்த்து ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு அந்நிகழ்ச்சியாளர்களை திட்டு வருகிறது.

Post a Comment