இனிப்பு சோமாஸ் (பூரி) செய்யும் முறை

Description:

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க:

மைதா – ஒரு கப்
வறுத்த ரவை – கால் கப்
கார்ன்ஃப்ளார் மாவு – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைக்கரண்டி

பில்லிங் தயாரிக்க:

துருவிய தேங்காய் – கால் கப்
கருப்பு எள் – இரண்டு மேசைக்கரன்டி
கசகசா – இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை – அரை கப்
நெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மைதா மாவில் குழைக்க வேண்டியவைளை சேர்த்து குழைத்து கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பூரி உருண்டைகளாக போடவும்.

பில்லிங் ரெடி செய்ய நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து கசகசா, எள், சர்க்கரை கலந்து எடுத்து வைக்கவும்.

பூரி உருண்டைகளை மைதாவில் சிறிது அரிசி மாவு கலந்து தேய்த்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து பில்லிங்கை ஒரு ஸ்பூன் உள்ளே வைத்து வெளியில் வராதவாறு அச்சை மூடவும். வெளியில் வந்தால் பொரிக்கும் போது அவ்வளவு பில்லிங்கும் வெளியில் வரும்.

அச்சு இல்லாதவர்கள் சிறிய பூரி மாதிரி உருட்டி விட்டு மைதா தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து ஒரத்தில் இந்த கலவையை ஒட்டி ஒரு சாவியை கொண்டு மூடும் இடத்தில் லைனாக குத்தி கொண்டே வர வேண்டும்

இப்போது எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இனிப்பு சோமாஸ் ரெடி.

Post a Comment