சத்து நிறைந்த கேழ்வரகு பால் கஞ்சி

Description:

தேவையான பொருட்கள் :

முளைக்கட்டி அரைத்த கேழ்வரகு மாவு – ஒரு கப்,
பாதாம், முந்திரி தலா – 10,
ஏலக்காய் – 5,
காய்ச்சாத பால் – ஒரு கப்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு.

செய்முறை :

கேழ்வரகு மாவுடன் பாதாம், முந்திரி, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து காற்று புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதுவே ராகி கஞ்சி பவுடர்.

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

2 டீஸ்பூன் அரைத்த கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவை ஊற்றி கைவிடாமல் கிளறி விடவும்.

கேழ்வரகு வெந்தவுடன் அதில் பனங்கற்கண்டு, குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி பருகவும்.

சத்து நிறைந்த கேழ்வரகு பால் கஞ்சி ரெடி.

பயன்: படிக்கும் மாணவர்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச் சத்து, புரதச் சத்து கிடைக்கும். மாணவர்களுக்கு ஏற்படும் சோர்வை நீக்கும்.

Post a Comment