நோயெதிர்ப்பு சக்தி பற்றி இதுவரை அறியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

Description:

நோயெதிர்ப்பு சக்தி என்பது பல உறுப்புகளின் துணையுடன் தான் சீராக செயல்பட முடியும். குறிப்பாக,நிண நீர் மண்டலம், மண்ணீரல், தைமஸ் எனப்படக்கூடிய கழுத்துக் கணையச் சுரப்பி ஆகியவற்றை குறிப்பிடலாம். #2 நோயெதிர்ப்பு சக்திக்கு பல்வேறு வகையான செல்கள் துணை புரிகின்றன. ஒவ்வொரு செல்களுக்கும் தனித்துவமான செயல்பாடுகள் இருக்கும். இவை பிற செல்களுக்கு தகவலை அனுப்பும் அதன் மூலமாகத் தான், வைரஸ் பரவுவதும் நடக்கிறது. இந்த செல்களிலேயே சாதரணமானதும் அசாதரணமானதும் இருப்பதுண்டு. #3 பொதுவாக இந்த நோயெதிர்ப்பு சக்திக்கான செல்கள் நம்முடைய எலும்பு மஜ்ஜைகளில் இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் இருக்கிறது. அங்கிருந்து தான் நமக்கு நோயெதிர்பிற்கான செல்கள் உற்பத்தியாகிறது. நியூட்ரோபில்ஸ்,பசோபில்ஸ்,மோனோசைட்ஸ்,மேக்ரோபேஜ்ஸ்,இயூசினோபில்ஸ் மற்றும் லிம்போசைட்ஸ் இவை அந்த செல்களில் சிலவாகும். #4 நிணநீர் அமைப்பு என்பது ரத்த நாளங்களுக்கும் நிண நீர் முனைகளுக்கும் ஒரு பாலமாக இருக்கிறது. நிணநீர் திரவ வடிவில் இருக்கும்.நிணநீர் அமைப்பு முழுவதிலும் நிணநீர் நிறைந்திருக்கும். இந்த நிணநீர் அமைப்பு ரத்த ஓட்டத்திற்கும் நம் உடலில் இருக்கக்கூடிய திசுக்களுக்கும் நடுவில் ஓர் பாலமாய் இருக்கிறது. இந்த நோயெதிர்பிற்கான செல்கள் இந்த நிணநீர் அமைப்பு வழியாக பயணித்து நிண நீர் முனைகளை அடைகிறது. #5 நிணநீர் முனைகள் என்பது நம் உடல் முழுவதுமே இருக்கும். பெரும்பாலும் இவை கூட்டமாக குவிந்திருக்கும். அதிகப்படியான நிணநீர் முனை இருக்குமிடம் நம்முடை இடுப்புப்பகுதி, கழுத்துப்பகுதி மற்றும் அக்குள் பகுதியாகும். #6 இவை ஒன்றோடு ஒன்று தொடர்பிலேயே இருக்கும். நம் உடலுக்கு ஒவ்வாத ஏதேனும் புதிதாக நுழைந்து விட்டது என்றால் உடனே இந்த நிண நீர் முனைகள் துரிதமாக செயல்பட்டு அவற்றை நீக்கிடும். முழு ஆரோக்கியமான நிணநீர் முனையான பட்டாணி அளவில் இருக்கும். நிண நீர் முனை செயல்படத் துவங்கிவிட்டது என்றால் அதன் அளவு இன்னும் விரிவாகும்.

#7 அது விரிவடைந்திருக்கிறது என்றால் நோயெதிர்ப்பு சக்தி இருக்கிறது, நிண நீர் முனைகள் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது என்ற அர்த்தப்படும். இந்த நோயெதிர்ப்பு சக்திக்கான செல்கள் பல விதங்களில் வேலை செய்கிறது. மேக்ரோபேஜஸ் எனப்படுகிற செல் வகை பாக்டீரியா போன்ற மைக்ரோ ஆர்கானிசத்தை முழுங்கிடும். நியூட்ரோபில்ஸ் என்ர செல் வகை நம் உடலுக்கு தொடர்பில்லாத வைரஸ் கிருமிகளை கண்டால் அதனை தாக்கும். லிம்போசைட்ஸ் எனப்படுகிற செல்கள் ஆண்டிபாடீஸை அதிகளவு உற்பத்தி செய்திடும். #8 இதனால் வைரஸ் கிருமி பல்கிப் பெருகுவது தடுக்கப்படும். சில நோயெதிர்ப்பு சக்திக்கான செல்களுக்கு நினைவுத் திறன் இருக்கும். முதன் முதலில் நம் உடலுக்கு தொடர்பில்லாத ஒரு வைரஸ் தாக்கினால் அதனை அடையாளம் கண்டு நீக்கும். பின்னர் அந்த வைரஸை நினைவில் வைத்துக் கொள்ளும். அதே வைரஸ் மீண்டும் நம்மை தாக்கினால் முன்பை விட மிக வேகமாக அந்த வைரஸை அழித்திடும். #9 சில வைரஸ்களை இந்த நோயெதிர்ப்பிற்கான செல்கள் ஆண்டுக்கணக்கில் நினைவில் வைத்துக் கொள்ளும் அதனால் தான் அடுத்தடுத்து சில வைரஸ் தொற்றுகள் நமக்கு ஏற்படுவதில்லை. குறிப்பாக அம்மை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். #10 வயிற்றின் இடது பகுதியில் நமக்கு மண்ணீரல் அமைந்திருக்கிறது. முழு ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய ஒரு நபருக்கு இதன் எடை 150 முதல் 200 கிராம் வரையில் இருக்கும். நோயெதிர்ப்பு சக்திக்கு மண்ணீரல் மிகவும் அவசியமான ஓர் உறுப்பாகும். இவை ரத்தத்தை வடிகட்டும் அப்படி வடிகட்டும் போது வித்யாசமான புது செல்கள் மற்றும் மைக்ரோ வைரஸ் எதாவது வந்தால் அதனை நீக்கும். அதோடு இவை தான் நோயெதிர்ப்பின் செல்களான லிம்போசைட்ஸ் மற்றும் சில ஆண்ட்டிபாடீசை உற்பத்தி செய்கிறது. #11 கழுத்துக்கணையச் சுரப்பியான தைமுஸ் நம் மார்புப்பகுதிக்குள் இருக்கும். மார்பெழும்பிற்கும் இதயத்திற்கும் இடையில் இந்த சுரப்பி இருக்கும். இந்த சுரப்பி குழந்தைகளுக்கு மிக முக்கியமானதாகும். இந்த சுரப்பி தான் லிம்போசைட்ஸுக்கு தகவல் அனுப்பும். இந்த தைமுஸ் செல்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியின் மேற்பார்வையாளர். #12 இவை, இது நம் உடலில் இருக்கக்கூடிய செல் தான், இவை புதிதாக வந்திருக்கிறது என்று வித்யாசம் கண்டுபிடிக்கும். பருவ வயதிற்கு பிறகு இந்த சுரப்பி அப்படியே சுருங்கிவிடும். ஆரம்பத்தில் இவை காண்பித்து கொடுக்கிற வித்யாசங்களை தான் நோயெதிர்பு செல்கள் நினைவில் வைத்துக் கொண்டு அடுத்தடுத்து தாக்கும் போது மிக வேகமாக செயல்பட்டு அவற்றை நம் உடலிலிருந்து நீக்குகிறது. #13 டான்சில், அதற்கு மேலே இருப்பது அடினாய்டு. இவை இரண்டும் நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் லிம்போசைட்ஸ் இருக்கும். டான்சில் மற்றும் அடினாய்ட் இரண்டுமே நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது. ஆனால் இவை அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. #14 அடினாய்டு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சுருங்கிடும். பருவமெய்தும் காலத்தில்

முற்றிலுமாக சுருங்கிவிடும், குறிப்பிட்ட வயதுக்கு பிறகு டான்சில் மற்றும் அடினாய்ட் சுரப்பியை அகற்றினால் கூட உங்களது நோயெதிர்பு சக்தி குறைந்திடாது. #15 சில நேரங்களில் மிகச் சிறிய வைரஸுக்கு அதிகமாக செயலாற்றும் அதன் வெளிப்பாடு தான் உங்களுக்கு அலர்ஜி அல்லது சென்ஸ்டிவிட்டி என்று சொல்கிறோம். உண்மையான வைரஸ் தாக்குதல் இல்லாமலேயே தவறுதலாக நம் செல்களையே தாக்கும் இதனை தான் ஆட்டோ இம்யூன் என்பார்கள். #16 நோய்தொற்றிலிருந்து இது தான் நம்மை காக்கிறது. எதேனும் வைரஸ் நம்மை தாக்கியிருக்கிறது என்று கண்டறிந்தால் உடனடியாக அதனை கண்டறிந்து அதனை அழிப்பது தான் இதன் முக்கிய வேலை. சரியாக அடையாளம் காணமுடியவில்லை அல்லது, அதனை அழிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று சொன்னால் நமக்கு தான் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமானதாகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கியமான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அவசியமாகும்.

Post a Comment