சொப்பு கொழுக்கட்டை

Description:

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

அரிசி மாவு – 3 கப்,
தண்ணீர் – 3-3½ கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய், சர்க்கரை – தலா 1 டீஸ்பூன்.

பூரணத்திற்கு:

தேங்காய்த்துருவல் – 1½ கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
வறுத்த எள் – சிறிது,
வேக வைத்து மசித்த கடலைப்பருப்பு – 1/2 கப்.


எப்படிச் செய்வது?

கடாயில் சுத்தம் செய்து பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், எள் சேர்த்து சுருள வதக்கவும். பூரணம் ரெடி. அரிசி மாவு, உப்பு, நெய், சர்க்கரை கலந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அரிசி கலவையை கொட்டி சுருள கிளறி இறக்கி, 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு ஆறியதும் நன்கு பிசைந்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து சொப்பு மாதிரி செய்து, அதன் உள்ளே 1 டீஸ்பூன் பூரணம் வைத்து, சிறிது மாவில் மூடி போல் செய்து தண்ணீரில் ஒட்டி மூடவும். சொப்பு கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: கோவா, நட்ஸ் கலவை, பொடித்த பழக்கலவை, காரமாக பருப்பு தேங்காய், மிளகாய் பூரணத்திலும் செய்யலாம்.

Post a Comment