சோயா சங்க் கட்லெட்

Description:

என்னென்ன தேவை?

துருவிய பீட்ரூட் – 1,
துருவிய கேரட் – 2,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
புதினா – 1/4 கப்,
பிரெட் க்ரம்ஸ் – 1 கப்,
மைதா – சிறிது,
பொரிக்க எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
சோயா சங்ஸ் (மீல்மேக்கர்) – 1/4 கப்.


எப்படிச் செய்வது?

வெதுவெதுப்பான தண்ணீரில் மீல்மேக்கரை 5 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை பிழிந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், பீட்ரூட், கேரட், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, புதினா, மீல்மேக்கர், மிளகாய்த்தூள், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறவும். உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வட்டமாகவோ, சதுரமாகவோ, உருண்டையாகவோ செய்து கொள்ளவும். மைதாவை தண்ணீரில் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். கட்லெட்டுகளை மைதாவில் தோய்த்தெடுத்து, பிரெட் க்ரம்ஸில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.

Post a Comment