பிரபல சீரியல் பிரபலம் திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் குழு (புகைப்படம் உள்ளே)

Description:

சீரியல் என்பது குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். ஹிந்தியில் Ishqbaaz என்ற சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியல் தமிழில் கூட காதலா காதலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

தற்போது இந்த சீரியலில் தயாரிப்பு மேற்பார்வை செய்து வந்த சஞ்சய் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 2) மாலை 6.30 மணியளவில் 16 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய தற்கொலைக்கு காரணம் நானே. பண பிரச்சனையால் குடும்பமும் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த Ishqbaaz குழுவினர் சஞ்சய் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவரது தற்கொலை தனக்கு அதிர்ச்சியளித்துள்ளதாக இந்த சீரியல் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Post a Comment