மீல்மேக்கர் சுண்டல்

Description:

மீல்மேக்கர் – 1 கப்,
வெள்ளைப்பட்டாணி – 1/4 கப்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் – சிறிது,
கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை,
இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது,
சின்னவெங்காயம் – 15,
தக்காளி விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 1 டீஸ்பூன்,
கடுகு, உடைத்த உளுந்து – தலா 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வெள்ளைப்பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைத்து மெத்தென்று வேகவைத்துக் கொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கரை வேக விட்டு எடுத்து நீரை ஒட்ட பிழிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெங்காய விழுது, தக்காளி விழுது, இஞ்சி விழுது, கிள்ளிய கறிவேப்பிலை, சோம்பு, மஞ்சள் தூள், கேசரி பவுடர், மீல்மேக்கர் போட்டு கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெந்த பட்டாணி, பொரித்த மீல்மேக்கர், சிறிது உப்பு போட்டு கிளறி தேங்காய்த்துருவல், மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Post a Comment