சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

Description:

தேவையான பொருட்கள் :

(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)

வாழை மீன் – 3
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 20
வெங்காயம் – 2
நாட்டுத் தக்காளி – 4
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் – 1
கொத்தமல்லி – ஒரு கையளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மீன் குருமா ரெடி.

Post a Comment