சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி

Description:

தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கறி – 1/2கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 3
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை – தலா 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின் [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்த வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பின் குக்கரை மூடி முன்று விசில் வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து சூடாக பறிமாறவும்.

சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி ரெடி.

Post a Comment