உங்கள் சமையலறையில் உள்ள வலி நிவாரண பொருட்கள்

Description:

உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டு சமையல் அறையிலேயே பல வலி நிவாரண பொருட்கள் இருக்கின்றன. கீழ் கூறப்படும் பொருட்கள் உங்களுக்கு எத்தனை உதவிகரமாக இருக்கும் என்று பார்ப்போம்.

* காபி: மைக்ரேன் தலைவலி மருந்துகளில் சிறிதளவு கேபின் இருக்கும். மைக்ரேன் (ஒற்றை தலைவலி) ஆய்வு நிறுவனம் மைக்ரேன் மாத்திரைகளை நல்ல சூடான காபியுடன் எடுத்துக் கொள்ள சிபாரிசு செய்கின்றது. கேபின் மாத்திரை வயிற்றில் நன்கு உறிஞ்சப்பட 40 சதவீதம் கூடுதலாக உதவுகின்றதாம்.

* தேன்: தேனுக்கு வைரஸ் மற்றும் வீக்கத்தினை எதிர்க்கும் குணம் உள்ளது. சிஷீறீபீ ஷிஷீக்ஷீமீs (ஒரு வகை வைரஸ் தாக்குதல், வாய் உள்ளே வரும் புண்கள்) இவற்றின் மேல் தினமும் 4 முறை தேனை தடவினால் 43 சதவீதம் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் ‘க்ரீம்’களை விட கூடுதல் பயன் அளிக்கின்றது என்பதனை துபாய் சிறப்பு மருத்துவ நிறுவன ஆய்வு உறுதி செய்துள்ளது.

* தண்ணீர்: அடி, காயம் இவற்றுக்கு நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஊசி மூலம் திரவ உணவும், நீரும் செல்வதின் ஒரு காரணம் நீர் காயங்களை ஆற்றும்.

எந்த அடியோ, வீக்கமோ அல்லது நோயோ இருந்தால் அவ்வப்போது சிறிது நீர் குடித்த வண்ணம் இருங்கள். தசை நார்கள், எலும்புகளுக்கிடையே உள்ள திரவம் இவற்றினை தேவையான நீர் வளத்தோடு வைக்கின்றது. இதனால் எலும்புகள் வலியின்றி அசையும். தண்ணீர் வீக்கம் பொருட்களை மெலிதாக்கி வெளித்தள்ளும். இதனால் வீக்கம் குறையும்.

* முள்ளங்கி: முள்ளங்கி நமது சைனஸ் குழிகளில் ரத்த ஓட்டத்தினை அதிகரித்து அடைப்புகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை ஜெர்மன் ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. பொதுவில் முள்ளங்கியை சாலட் போல் சிறிது எடுத்துக் கொண்டாலே ஒரு ‘விறுவிறுப்பான’ உணர்வு ஏற்படும். தினமும் காலை, மாலை சிறிதளவு அதாவது 2 டேபிள் ஸ்பூன் அளவு முள்ளங்கி ஜூஸ் எடுத்துக் கொண்டாலே சைனஸ் பாதிப்பு குறையும்.

* அன்னாசிபழம்: அன்னாசி பழத்திற்கு வயிற்றில் காற்று உற்பத்தி செய்து புரதத்தினை உடைக்கும் திறன் உண்டு. வயிறு மற்றும் சிறுகுடலில் காற்று உற்பத்தியினை இது வெகுவாய் குறைக்கும். ஆய்வுகள் கூறுவது ஒரு சில கப் அன்னாசி பழம் தினம் உட்கொண்டால் வயிற்றில் காற்று, காற்று சுற்றும் வலி வராது என்பதுதான்.

* ஓட்ஸ்: இது க்ளூடன் அற்றது. பெண்கள் ஒரு வேளை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் கருப்பை அகப்படலத்தால் ஏற்படும் வலி 60 சதவீதம் வரை குறையுமாம்.

* உப்பு: உள் வளரும் நகம் வீக்கத்தினையும், வலியினையும் தரும். மிதமான சுடு நீரில் உப்பு சேர்த்து 20 நிமிடம் காலை அதில் அழுத்தி வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அமெரிக்கர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்த உப்பு சிகிச்சை பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது.

* இஞ்சி: இஞ்சியில் ஜின்ஜரால் என்ற பொருள் உள்ளது. இது வலியைத் தூண்டும் ஹார்மோன் உருவாவதினை தடுக்கின்றது. டேனிஷ் ஆய்வாளர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் உலர்ந்த இஞ்சி அல்லது இரண்டு டீஸ்பூன் இஞ்சி இவற்றினை தொடர்ந்து பயன்படுத்தியவர்களுக்கு மூட்டுவலி, சதைவலி, வீக்கம், இறுக்கம் இவை இரண்டு மாத முடிவில் 63 சதவீதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

* கிராம்பு: பல் வலியா? உடனே பல் மருத்துவரிடம் செல்ல முடியவில்லையா? ஒரு கிராம்பினை மென்மையாக மெல்லுங்கள். வலியில் இருந்து சமாளிக்கலாம். அதற்குள் மருத்துவரிடம் சென்று விடுங்கள் என கை வைத்தியமாக கூறப்படுகின்றது.

* ஆப்பிள் சிடார் வினிகர்: ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் ஒரு கிளாஸ் நீர் கலந்து உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது நெஞ்சு எரிச்சலைத் தவிர்க்கும். இதனை மேலை நாடுகளில் பழக்கத்தில் கொண்டிருந்தாலும், அடிக்கடி இவ்வாறு செய்ய வேண்டாம் என்றே இங்கு அறிவுறுத்தப்படுகின்றது.

* மஞ்சள்: பல பல்கலைக்கழகங்களின் ஆய்வின் படி ¾ டிஸ்பூன் மஞ்சளை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்வது மூட்டு வலி, சதை வலியினை 50 சதவீதம் வரை குறைக்கும்.

* தயிர்: ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு ஏற்படுவதற்கு முன்னால் ஹார்மோன் மாறுபாட்டால் வலியை 80 சதவீத பெண்கள் அனுபவிக்கின்றனர். தினமும் 2 கப் அதிக கொழுப்பு இல்லாத தயிர் எடுத்துக் கொண்டால் இந்த வலி பாதிப்பு குறைகின்றது. தயிரில் கால்ஷியம்கூடுதலாக இருப்பதால் நரம்புகள் அமைதிப்படும்.

* திராட்சை: திராட்சை இறுகிய ரத்த குழாய்களை தளர்த்தும். ரத்த ஓட்டத்தினை பாதிக்கப்பட்ட திசுக்களில் உடனடி சீர் செய்யும். தினமும் ஒரு கப் திராட்சை கூழ் முதுகு வலிக்குக் கூட நல்லது.

* ப்ளாக்ஸ் விதை: ஓரிரு டீஸ் பூன் ப்ளாக்ஸ் விதை தினமும் எடுத்துக் கொள்வது அனைவருக்குமே நல்லது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலி நன்கு குறையும்.

* தக்காளி: பொட்டாசியம் சத்து நிறைந்த தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்வது கால் வெடிப்புகளைத் தவிர்க்கும்.

மேற்கூறப்பட்டவைகள் நோய் தவிர்ப்பு மற்றும் மருந்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள கூடுதல் பலன் அளிக்கும். இவையே சிகிச்சையாக அமையாது என்பதனை அறிந்து செயல்படுவோம்.

Post a Comment