உபவாசம் ஆரோக்கியம் சார்ந்தது

Description:

உபவாசம் என்பது ஆன்மீகம் சார்ந்தது மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்ததுதான். உபவாசமும் பட்டினி கிடப்பதும் ஒன்றல்ல. உபவாசம் என்பது உணவு, திரவ உணவு இவற்றினை குறிப்பிட்ட நேரம்வரை உண்ணாமல் இருப்பது. இது உடலுக்கு அநேக நன்மைகளை அளிக்க வல்லது. இதில் பல பிரிவுகள் உள்ளன.

அடிக்கடி ஒரு நாள் அல்லது அரைநாள் அல்லது சில மணிநேரங்கள் உண்ணாமல் இருப்பது ஒருவகை. சிலர் 2 நாட்கள் கூட இருப்பது உண்டு.

இதில் 12 மணிநேரம் வரை சாப்பிடாமல் இருப்பது கடைபிடிக்க மிக எளிதானது. மாலை 6 மணிக்குள் உணவு முடித்து மறுநாள் காலை 6 மணி வரை உண்ணாமல் இருப்பது மிகவும் எளிதானது. காலை மற்றும் மாலை மட்டுமே உணவு உட்கொள்பவர்கள் நிரந்தரமாய் அநேகர் உள்ளனர். இவர்கள் அனைவருமே அதிக சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடன் இருப்பர். சிலர் ஒருநாள் விட்டு ஒரு நாள் உண்பர்.

சிலர் பழம், காய்கறிகளை மட்டுமே உண்டு திட உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பர்.

எந்த வகையில் இருக்கலாம் என்பதை உங்கள் உடல் அறிந்து நீங்களே மேற்கொள்ளலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு அளவான, முறையான உணவு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இவர்களுக்கு சரியாய் இருக்கும்.

* எடை குறைவுக்கு மிக எளிதான ஆரோக்கியமான நிரந்தர தீர்வு.

* உண்ணா விரதம் ஹார்மோன் (பிநிழி) இதனை நன்கு சுரக்கச் செய்யும்.

* விளையாட்டு வீரர்களுக்கு உண்ணாவிரதம் மிகச்சிறந்தது.

* நீரிழிவு 2-ம் பிரிவு தவிர்க்கப் படுகின்றது.

* கொழுப்பு சத்து சீராய் இருக்கும்.

* முதுமை தள்ளிப் போகும்.

* ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடக் கூடாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Post a Comment