காளான் மசாலா கிரேவி

Description:

காளான் – 1 பாக்கெட்
பல்லாரி – 2
தக்காளி – 3
பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
தேங்காய் – 1/4 மூடி
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு – சிறிதளவு


எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை பிறகும் போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை லேசான தீயில் வைத்த பிறகு, காளானை கழுவி 2 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

வாணலியில் ஏற்கனவே உள்ள கலவையுடன், காளான், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அவ்வளவுதான்… இத்துடன் மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். அவ்வளவுதான்… சுவையான காளான் மசாலா கிரேவி தயார்.

Post a Comment