நிகழ்ச்சி மேடையில் சங்கடத்திற்கு உள்ளான ஓவியா- உதவிய நடிகர்

Description:

பிக்பாஸ் புகழ் ஓவியா படங்களில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

விருது விழாக்களில் ஓவியாவை தற்போது அதிகம் பார்க்கிறோம். அண்மையில் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பாடகர்களின் பெயரை மாற்றி சொல்லி சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அதாவது அவருடன் மேடையில் இருந்த இசையமைப்பாளரும், பாடகருமான தேவி ஸ்ரீ பிரசாத் என்று கூறுவதற்கு பதிலாக எஸ்.பி.பி சார் எனக்கு உங்களுடைய பாடல் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

உடனே அனைவரும் சிரிக்க, சதீஷ் அது டிஎஸ்பி என்று தெரிவித்தார்.

Post a Comment