காளா ஜாமூன்

Description:

என்னென்ன தேவை?

மைதா – 100 கிராம்,
சர்க்கரை – 250 கிராம்,
தண்ணீர் – 200 மி.லி.,
இனிப்பு இல்லாத கோவா – 250 கிராம்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
பால் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க நெய் – தேவைக்கு,
பால் – 30 மி.லி.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 50 கிராம் பொடித்த சர்க்கரை, கோவா, மைதா, பால் பவுடரை ஒன்றாக கலந்து, இத்துடன் பால் சேர்த்து அழுத்தாமல் நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தனியே வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மீதியுள்ள சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து உருகியதும் மிதமானச் சூட்டில் உருண்டைகளை நன்கு பொரித்தெடுத்துக் கொள்ளவும். உருண்டைகள் காயும் முன்பு அனைத்தையும் நெய்யில் பொரிக்கவும். சூடு ஆறியதும் சர்க்கரைப்பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: மாவில் சர்க்கரையைச் சேர்ப்பதால் ஜாமூன் நெய்யில் பொரிக்கும்போது கருப்பாக பொரிந்து விடும். பொதுவாகவே காளா ஜாமூனை நெய்யில் பொரிக்க வேண்டும். சூடான உருண்டைகளை பாகில் சேர்த்தால், இனிப்பு சுவை ஜாமூனில் ஏறாது. அதே போல் பாகு அதிக சூட்டில் இருக்கும் போது உருண்டைகளை சேர்த்தால் உருண்டைகள் உடைந்து விடும்.

Post a Comment