சென்னை மாணவி கல்லூரி முன்பு கொலை – பிக்பாஸ் பிரபலம் வேதனை

Description:

இன்று பிற்பகல் சென்னை கே கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த அஸ்வினி என்ற இளம்பெண்ணை அழகேசன் என்பவர் குத்தி கொலை செய்துள்ளார்.

அதுவும் கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்தது மிகப்பெரிய கொடூரம். இந்த செய்தியை அறிந்த பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் அதிர்ச்சியாகவும், வருந்தத்தக்கதாகவும் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை உள்ளது, அதுவும் கல்லூரி வளாகத்திலேயே நடந்தது பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த சமூகத்தில், நேற்றைய தினம் பெண்கள் தினத்தை கொண்டாடிய மறுநாளே ஒரு பெண் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment