ஓவியாவை தனக்கு ஏன் மிகவும் பிடிக்கும்- காரணத்தை முதன்முதலாக கூறிய ஆரவ்

Description:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்-ஓவியா பிரச்சனை குறித்து நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பேசுவார்களா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர்.

ஓவியாவை தனக்கு ஏன் மிகவும் பிடிக்கும் என்ற விஷயத்தை கூறியுள்ளார் ஆரவ். அதில் அவர், இந்த உலகத்தில் மிகவும் கஷ்டமான விஷயம் நாம் நாமாக இருப்பதுதான். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் ஓவியா அப்படி இல்லாமல் எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

Post a Comment