பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கிட்டு தற்கொலை – சிக்கிய கடிதம்

Description:

சமீபகாலமாக நடிகைகள் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் பிரபல நடிகை மௌமிதா சஹா. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை பக்கத்தில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்ததையடுத்து போலீசார் கதவை உடைத்து உடலை மீட்டுள்ளனர்.

அருகே ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தத்தால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் செல்போனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment