அவல் உப்புமா

Description:

மட்ட அவல் – 1 கப்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
மல்லித்தழை – சிறிது,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அவலை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு தண்ணீரை பிழிந்து தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைத் தாளித்து சீரகம், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் அவலைச் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி பரிமாறவும்.

Post a Comment