சிவகங்கை நெத்திலி மீன் மிளகு வறுவல்

Description:

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் – 300 கிராம்,
பொடித்த மிளகு – 35 கிராம்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
சோள மாவு – 100 கிராம்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 500 மி.லி.,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். இதில் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீனை போட்டு பொரித்தெடுத்து, வறுத்த கறிவேப்பிலையால் அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment