தேங்காய்ப்பால் தோசை

Description:

அரிசி மாவு – 1½ கப்,
சில்லிஃப்ளேக்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
துருவிய கேரட் – 3 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்,
மெல்லியதாக நறுக்கிய கோஸ் – 4 டேபிள்ஸ்பூன்,
சீரகம், பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கோஸ், கேரட் துருவல், இஞ்சி, பூண்டு விழுது வதக்கி, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து இறக்கவும். பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, தேங்காய்ப்பால், தேவையானால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி, மேலே 3 டீஸ்பூன் மசாலாவை வைத்து மூடி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.

Post a Comment