பூந்தி லட்டு

Description:

கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை – 1½ கப்,
தண்ணீர் – 1/2 கப்,
சோடா மாவு – 1 சிட்டிகை,
எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
இரண்டு துண்டுகளாக உடைத்த முந்திரி – 15,
காய்ந்த திராட்சை – 1 டீஸ்பூன்,
லவங்கம் – 10,
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடலை மாவு, சோடா மாவு சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று நீர்க்கக் கரைக்கவும். கடாயில் எண்ணெயையும், நெய்யையும் காயவைத்து பூந்தி கரண்டியில் ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து ஊற்றி எண்ணெய்க்கு நேராக மற்றொரு கரண்டியால் தட்டவும். இது சிறு பூந்திகளாக விழும். இதனை அரைவேக்காடாக எடுக்கவும்.

(பூந்திகளை எடுத்து நசுக்கினால் நசுக்கென்று அழுந்த வேண்டும்.) இதே போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும். சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அரை கம்பிபாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, லவங்கம் சேர்த்து கலந்து, அத்துடன் பொரித்த பூந்திகளையும் சேர்த்து நன்கு கிளறி, மேலும் சிறிது நேரம் வைக்கவும். கை பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாக நன்கு அழுத்தி பிடித்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: நன்கு ஆறிவிட்டால் பாகு உறைந்து லட்டுகள் பிடிக்க முடியாமல் உதிர்ந்து விடும். ஆகவே வேகமாக உருட்டவும். அப்படி உதிர்ந்து போனால் சிறிது இளம் சூடான பாலை தெளித்து பிசைந்து உருட்டலாம். ஆனால் இந்த லட்டை அதிக நட்கள் வைத்துக் கொள்ள இயலாது.

Post a Comment