சிவப்பு தண்டுக்கீரை கூட்டு

Description:

தேவையான பொருட்கள்;

சிவப்பு தண்டுக்கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – கால் கப்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
பூண்டு – 2 பல்
நெய் – 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 2


செய்முறை:

கீரையை நன்கு சுத்தம் பண்ணி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும்.

அரைக்க கொடுத்த வற்றை அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்க்கவும்.வதக்கவும்.

பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு மசியவிட்டு அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கிளரி அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான சிவப்பு தண்டுக்கீரை கூட்டு ரெடி.

Post a Comment