வட்ட அப்பம்

Description:

பச்சரிசி மாவு – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
இளநீர் – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
பச்சரிசி சாதம் அரைத்தது – 1/4 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 20,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் (ஈனோ உப்பு- டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் பொங்கி வந்ததும் 1/4 கப் தண்ணீரில் ஈனோவை கலந்து மாவில் ஊற்றவும். பின்பு இட்லி சட்டி அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி அதன்மீது ஒரு வட்டமான பாத்திரத்தை வைத்து, கலந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து கேக் போல் எடுக்கவும். அதன்மீது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment