பல்டி மீட்

Description:

மட்டன் – 1 கிலோ,
இஞ்சி பூண்டு விழுது – 100 கிராம்,
பிரவுன் வெங்காய விழுது – 250 கிராம்
உப்பு – தேவைக்கு,
கருப்பு ஏலக்காய் – 2,
ஏலக்காய் – 2,
ஜாதிக்காய் – 1/4 டீஸ்பூன்,
கிராம்பு – 1,
எண்ணெய் – 200 மி.லி.,
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தக்காளி விழுது – 350 கிராம்,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
தனியா – 3 டீஸ்பூன்,
தயிர் – 100 கிராம்,
தனியா தூள் – 3 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
பட்டை – 1,
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மட்டனை தனியாக வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கருப்பு ஏலக்காய், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மட்டன் துண்டுகள், வெங்காய விழுது, மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் எல்லாம் சேர்த்து தம் போடவும். மட்டன் நன்கு வெந்து மசாலா வாசனை போன பிறகு அதில் தக்காளி விழுது, மற்ற மசாலாக்களை சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, சாதம், புல்காவுடன் பரிமாறவும்.

Post a Comment