வெள்ளை பட்டாணி சாட் சுண்டல்

Description:

வெள்ளை பட்டாணி – 1 கப்,
உப்பு – சிறிது,
ஓமப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
ரெடிமேட் பானிபூரி – தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கப்,
மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்.

சாட் மசாலா ரசம் செய்ய…

புளி – சிறிது, எலுமிச்சைச்சாறு – 1 பழம்,
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் (மாங்காயத்தூள்) – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் நீர்க்க கரைத்து, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூள் கலந்து தனியே வைக்கவும். பூரியின் மேல் துளையிட்டு வெந்த பட்டாணி அதன் மேல் வெங்காயம், மல்லித்தழை, ஓமப்பொடி, சாட் ரசம் ஊற்றி பரிமாறவும்.

Post a Comment