இட்லிக்கு அருமையான தக்காளி ஊறுகாய்

Description:

தேவையான பொருட்கள்

தக்காளி – கால் கிலோ
பூண்டு – 6 பல்
காய்ந்த மிளகாய் – 6
வெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய், – தேவையான அளவு
புளி – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

Post a Comment