காராமணி பக்கோடா

Description:

வெள்ளை அல்லது சிகப்பு காராமணி – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 2,
பொடியாக நறுக்கிய தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
விரும்பினால் பெருங்காயத்தூள் – சிறிது,
நறுக்கிய கறிவேப்பிலை – 1 டீஸ்பூன்,
அரிசி மாவு – 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காராமணியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, அரிசி மாவு, 2 டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பக்கோடா மாவை கிள்ளிப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.

Post a Comment