சென்னா சாலட்

Description:

என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
மாதுளை முத்துக்கள், கேரட் துருவல் – சிறிது,
கொத்தமல்லித்தழை, புதினா – சிறிது, மிளகுத்தூள், உப்பு – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடிய விடவும். வெந்த கடலையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து கலந்து, மேலே மாதுளை முத்துக்கள், கேரட் துருவல் தூவி பரிமாறவும்.

Post a Comment