நூடுல்ஸ்

Description:

ப்ளெயின் நூடுல்ஸ் – 1 பாக்கெட்,
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
அனைத்து இங்கிலீஸ் காய்கறிகள் – 1 கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
மிளகுத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 1,
தக்காளி ப்யூரி – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொதிக்கும் தண்ணீரில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நூடுல்ஸை போட்டு நன்கு வேகவைத்து வடிகட்டவும். அப்பொழுது நூடுல்ஸ் ஒட்டாமல் இருக்கும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி தக்காளி ப்யூரி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின்பு சிறு துண்டுகளாக நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கி சோயா சாஸ், வெந்த நூடுல்ஸ், மிளகுத்தூள் போட்டு கிளறி சூடாக பரிமாறவும். விரும்பினால் சீஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.

Post a Comment